கொழும்பு கோட்டையிலிருந்து பயணத்தை ஆரம்பித்தது சுனாமி ரயில் 591!

#SriLanka #Colombo #Lanka4 #tsunami #Train #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
1 year ago
கொழும்பு கோட்டையிலிருந்து பயணத்தை ஆரம்பித்தது சுனாமி ரயில் 591!

2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி பெலியத்த புகையிரத நிலையத்தில் சுனாமி அனர்த்தத்தில் சிக்கிய புகையிரத பயணிகள் மற்றும் புகையிரத ஊழியர்களை நினைவுகூரும் வகையில் இன்று காலை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து பெலியத்த வரை புகையிரதம் ஒன்று இயக்கப்பட்டுள்ளது.

காலை 6.25 மணிக்கு மருதானை நிலையத்தில் இருந்து புறப்பட்ட புகையிரதம் 6.50 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை அடைந்து, மீண்டும் அங்கிருந்து பெலியத்த நோக்கி புறப்பட்டது.

images/content-image/2023/12/1703567270.jpg

2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தில் சிக்கிய ரயிலின் இயந்திரம் 591 இன்று பயணிக்கின்றமை ஒரு சிறப்பு அம்சமாகும்.

591 ஆம் இலக்க இயந்திரத்திற்கு கோட்டை ரயில் நிலைய அதிகாரிகள் மலர் தூவி வணங்கினர்.

பின்னர் அங்கிருந்து ரயில் புறப்பட்டு பெலியத்த நிலையத்தில் சுமார் 10 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு சுனாமி நினைவேந்தல் நடைபெற்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!