நடு வீதியில் வைத்து தாக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்!

#SriLanka #Police #Attack #kandy #Lanka4 #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
1 year ago
நடு வீதியில் வைத்து தாக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்!

போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முற்பட்ட சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கண்டி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட முயற்சித்த போது அதில் பயணித்தவர், குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

images/content-image/2023/12/1703565913.jpg

பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன் முதற்கட்ட விசாரணைகளில் அவர் மதுபோதையில் இருந்தமை தெரியவந்துள்ளது.

இதேவேளை, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் களுத்துறை கட்டுகுருந்த பிரதேசத்தில் கடலில் நீராட சென்ற நிலையில் நீரில் மூழ்கி நேற்று உயிரிழந்தார்.

களுத்துறை - நாகொட பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!