சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு ரயில் ஊழியர்கள் அஞ்சலி!

#SriLanka #Lanka4 #tsunami #sri lanka tamil news #lanka4Media #lanka4_news #lanka4.com
Thamilini
1 year ago
சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு ரயில் ஊழியர்கள் அஞ்சலி!

2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி பரலிய புகையிரத நிலையத்தில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தில் காயமடைந்த புகையிரத பயணிகள் மற்றும் புகையிரத ஊழியர்களின் நினைக்கூறும் வகையில் இன்று (26.12) சிறப்பு புகையிரதம் ஒன்று இயக்கப்பட்டுள்ளது. 

குறித்த புகையிரதமானது கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து பெலியத்த வரை  இயக்கப்பட்டுள்ளது.  

காலை 6.25 மணிக்கு மருதானை நிலையத்திலிருந்து புறப்பட்ட புகையிரதம் 6.50 மணிக்கு கொழும்பு கோட்டை நிலையத்தை வந்தடைந்தது. 

இதன்போது  சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு கோட்டை ரயில் நிலைய அதிகாரிகள் ரயிலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் ரயில் புறப்பட்டு பரேலிய நிலையத்தில் சுமார் பத்து நிமிடங்கள் நிறுத்தப்பட்டு சுனாமி நினைவேந்தல் நிலையத்தில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!