பிரான்ஸில் நத்தார் விருந்தை உட்கொண்ட 700 பேருக்கு நேர்ந்த கதி!

#SriLanka #Lanka4 #sri lanka tamil news #lanka4Media #lanka4_news #lanka4.com
Thamilini
1 year ago
பிரான்ஸில் நத்தார் விருந்தை உட்கொண்ட 700 பேருக்கு நேர்ந்த கதி!

ஐரோப்பாவை தலைமையாக கொண்டு செயல்படும் முன்னணி விமான நிறுவனம் ஒன்று அளித்த நத்தார் விருந்தில் உணவருந்திய 700 பேர் கடுமையான உடல் உபாதைக்கு உள்ளானதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

மேற்கு பிரான்ஸ் பகுதியில் லொய்ர்-அட்லாண்டிக் (Loire-Atlantique) பிராந்தியத்தில் மாண்டார்-டி-பிரெடான் (Montoir-de-Bretagne) பகுதியில் உள்ள விமான தயாரிப்பு நிறுவனத்தின் சொந்த உணவகத்தினால் வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட ஊழியர்களுக்கே  மேற்படி உடல் உபாதை ஏற்பட்டதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த நத்தார் விருந்தில் 1200 பேர் கலந்துக்கொண்டிருந்த நிலையில் அவர்களில் 700 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விருந்தில் பல்வேறு உயர்தர அசைவ உணவுகள் மற்றும் ஐஸ்கிரீம் வகைகளும் வழங்கப்பட்டதாக விருந்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும், இச்சம்பவம் குறித்து பிரான்ஸ் நாட்டின் சுகாதாரத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதுடன் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள விமான தயாரிப்பு நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், விருந்தில் பயன்படுத்திய மாதிரி உணவுகள் உள்ளதாவும், விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என்றும் தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!