மனித உயிர்களை காவுக் கொண்ட ஆழிப் பேரலை இடம்பெற்று இன்றுடன் 19 வருடங்கள் பூர்த்தி!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #lanka4Media #lanka4_news #lanka4.com
Thamilini
1 year ago
மனித உயிர்களை காவுக் கொண்ட ஆழிப் பேரலை இடம்பெற்று இன்றுடன் 19 வருடங்கள் பூர்த்தி!

ஆழிப் பேரலை சுனாமி  அனர்த்தம் இடம்பெற்று இன்றுடன் (26.12) 19 வருடங்கள் பூர்த்தியாகுகின்றது. 

டிசம்பர் 26, 2004 அன்று சுமாத்ரா பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், சுனாமி எனும் இராட்சத அலைகளை உருவாக்கியது. இந்த அலைகள் தான் எம் உறவுகளை காவுக்கொள்ளப்போகிறது என்பது தெரியாமலேயே அன்றைய தினம் காலை 8.30 மணியளவில் கடலில் நிகழ்ந்த மாற்றத்தை காண கரையோரங்களில் ஏராளமான மக்கள் பிரசன்னமாகியிருந்தனர். 

அது வரை கண்டிராத அந்த அரிய நிகழ்வை என்வென்று தெரியமலேயே பார்த்துக் கொண்டிருந்த மக்களுக்கு கால பைரவர் போல் காட்சிக்கொடுத்தது சுனாமி என்னும் ஆழிப்பேரலை. கண்ணிமைக்கும் நொடிக்குள் எல்லாம் அழிந்து போனது. 

உயரிழந்து, உடமையிழந்து ஏராளமான மக்கள் நிர்கதியாகினர். அதுவரை மானுட பெருமானங்கள் பார்த்து பார்த்து கட்டிவைத்த மாடமாளிகைகள், சொகுசு விடுதிகள், நட்சத்திர பங்களாக்கள் என ஏழை, பணக்கார பாகுபாடு இன்றி அழித்து சென்றது சுனாமி என்னும் இராட்சத அலை. 

இந்த  பேரழிவில் 35,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன், 5000 பேர் காணாமல்போயினர். இந்நிலையில் சுனாமி பேரழிவில் சிக்கி உயிரிழந்தவர்களையும், காணாமல்போனவர்களையும் நினைவுக்கூறும் நிகழ்வு வருடா வருடம் டிசம்பர் 26 அன்று இடம்பெற்று வருகிறது. 

2012 முதல் தேசிய பாதுகாப்பு தினமாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

அதன்படி இவ்வருடமும் நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களையும் மையப்படுத்தி தேசிய பாதுகாப்பு தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளதுடன், முக்கிய வைபவம் சுனாமி நினைவுத்தூபிக்கு முன்பாகவும் நடைபெறவுள்ளது.  

காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை சுனாமி மற்றும் பிற பேரிடர்களில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்படும். 

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு மற்றும் அனைத்து தொலைபேசி சேவை வழங்குனர்களும் இணைந்து தேசிய பாதுகாப்பு தினத்துடன் இணைந்து புதிய அனர்த்த முன்னெச்சரிக்கை முறைமையை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக  சுதந்த ரணசிங்க குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!