தாய்லாந்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் : மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிப்பு!
#SriLanka
#world_news
#Lanka4
#Flood
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

தாய்லாந்தில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் இன்று (25.12) அறிவித்துள்ளனர்.
சில மாகாணங்களில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள காட்சிகளில் வீடுகளுக்குள் சேற்று நீர் புகுந்துள்ளமையால் மக்கள் மேல் மாடிகளில் தஞ்சமடைவதை காட்டுகிறது.
அத்துடன் வரும் காலங்களில் வெள்ள நீர் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும், ஆகவே மக்கள் இடர் முகாமைத்துவ நிலையங்களுக்கு செல்ல தயாராக இருக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.



