சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி நபர் பலி!
#SriLanka
#Death
PriyaRam
1 year ago
அம்பகஸ்தோவ, தங்கமுவ பகுதியில் தோட்டமொன்றில் அமைக்கப்பட்டுள்ள சட்ட விரோதமான மின்சார வேலியில் சிக்கி ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பகஸ்தோவ, பஹல தங்கமுவ, மிரிஸ்வத்த பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது தோட்டத்திற்கு அருகில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கு அனுமதியின்றி சட்ட விரோதமான முறையில் அமைக்கப்பட்டிந்த மின்சார வேலியில் சிக்கியதில் குறித்த நபர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தோட்டத்தின் உரிமையாளர் என கூறப்படும் 35 வயதுடைய நபரொருவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை அம்பகஸ்தோவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்