யாழில் நள்ளிரவில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ஆரம்பம்!
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
Thamilini
1 year ago
நாடாளாவிய ரீதியில் இன்று (25.12) கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைக்கட்டியுள்ளன. பெரும்பாலான ஆலயங்களில் நள்ளிரவில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு விசேட வழிப்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்படி யாழ் புனித மரியன்னை தேவாலயத்தில் நத்தார் விசேட திருப்பலி நள்ளிரவு 12 மணிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இயேசு பாலன் பிறப்பினை தொடர்ந்து யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பேர்னாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையினால் நத்தார்விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப் பட்டது.
நத்தார் விசேட திருப்பலியில் யாழ் மறை மாவட்ட அருட்தந்தையர்கள் ,வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உள்ளிட்ட பெருமளவிலான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.