வெள்ளப் பேரிடரால் பாதிப்புற்றோருக்கு நிவாரண உதவி.

#SriLanka #Kilinochchi #sritharan
Mayoorikka
1 year ago
வெள்ளப் பேரிடரால் பாதிப்புற்றோருக்கு நிவாரண உதவி.

கிளிநொச்சி மாவட்டத்தில், வெள்ளப் பேரிடரால் அதிகூடிய பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள 275 குடும்பங்களுக்கான உலருணவுப் பொதிகள் இன்றையதினம் (20) நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. 

 கனடா நாட்டில் வசிக்கும் சமூக ஆர்வலரான, New Spiceland Supermarket நிறுவன உரிமையாளர் சுரேஸ் மகேந்திரன் அவர்களது நிதியுதவியில், பன்னங்கண்டியைச் சேர்ந்த 150 குடும்பங்கள், கந்தபுரம் ஐயனார் குடியிருப்பில் வசிக்கும் 50 குடும்பங்கள், விநாயகர் குடியிருப்பில் வசிக்கும் 75 குடும்பங்கள் உள்ளிட்ட 275 குடும்பங்களுக்கே இந்த முதற்கட்ட நிவாரண உதவிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. 

images/content-image/2023/1703068119.jpg

 இதன்போது, தமது இடர்நிலை உணர்ந்து உதவிகளை வழங்கிய  சுரேஸ் மகேந்திரன் அவர்களுக்கு, பாதிக்கப்பட்ட மக்கள் தமது நன்றிகளையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

images/content-image/2023/1703068175.jpg

images/content-image/2023/08/1703068148.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!