வெற்றிடமாக வைக்கப்பட்ட பதவி: மீண்டும் அமெரிக்கா பறந்தார் பசில்

#SriLanka #Basil Rajapaksa #America #SLPP
Mayoorikka
2 years ago
வெற்றிடமாக வைக்கப்பட்ட பதவி: மீண்டும் அமெரிக்கா பறந்தார் பசில்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் அதன் முன்னாள் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ச அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார்.

 பசில் ராஜபக்ச அமெரிக்காவில் சுமார் இரண்டு மாதங்கள் அமெரிக்காவில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாநாட்டின் போது அந்த கட்சியின் பதவிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன. எனினும் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.

 தேசிய அமைப்பாளர் பதவிக்கு எவரும் நியமிக்கப்படவில்லை என்பதுடன் அந்த பதவி வெற்றிடமாக வைக்கப்பட்டுள்ளது.

 அமெரிக்க பிரஜையான பசில் ராஜபக்சவின் பிள்ளைகள் அமெரிக்காவில் வசித்து வருவதுடன் அவருக்கு அந்த நாட்டில் சொந்த வீடு உட்பட ஏராளமான சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!