பாடசாலை மாணவர்கள் தொடர்பில் பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
#SriLanka
#Warning
#School Student
PriyaRam
2 years ago
பாடசாலை மாணவர்களுக்கு வாய் புற்றுநோய் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் மாணவர்களின் வாய்பகுதியைச் சுற்றி வெள்ளை நிறத்தில் அடையாளம் காணப்படுமாயின் அது வாய் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம் என்றும், துரித உணவுகள் மற்றும் பொதியிடப்பட்ட உணவுகளை அதிகமாக உண்பது இதற்கான காரணமாக இருக்கலாம் என்றும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஏ.எச்.பி.எஸ்.கருணாதிலக்க, பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் ஆரோக்கியம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும், உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.