மீண்டும் கொரோனா: எச்சரிக்கை நிலையில் உள்ள இலங்கை!

#India #Corona Virus #SriLanka #Covid 19
Mayoorikka
2 years ago
மீண்டும் கொரோனா: எச்சரிக்கை நிலையில் உள்ள இலங்கை!

கேரளாவில் கொரோனா வைரசின் புதியமாறுபாடு வேகமாக பரவிவருவதை தொடர்ந்து எச்சரிக்கையாக உள்ளதாக இலங்கையின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 கேரளாவில் மிகவேகமாக பரவும் இலகுவில் அடையாளம் காணமுடியாத கொரோனா வைரசின் புதியமாறுபாடு பரவிவருவதை தொடர்ந்து பலர்பாதிக்கப்பட்டுள்ளனர். 

வெளிநாடுகளில் பரவும்புதிய நோயினால் இலங்கைக்கு எப்போதும் ஆபத்து என்பதால் இலங்கை எப்போதும் எச்சரிக்கையுடன் உள்ளது என சுகாதார அமைச்சின் கொரோனா விவகாரங்களிற்கான ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். 

 கேரளாவில் பரவும் புதிய வகை கொரோனா காரணமாக நாங்கள் எச்சரிக்கையுடன் இருக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். 

 48 மணித்தியாலங்களிற்கு மேல் காய்ச்சல் உட்பட நோய் அறிகுறிகள் தென்பட்டால் மக்கள் வைத்திய உதவியை நாடவேண்டும் தொற்று பரவல் ஆபத்தை தவிர்ப்பதற்கான முகக்கவசங்களை முடிந்தளவு பயன்படுத்தவேண்டும் மருத்துவபரிசோதனைகளை முன்னெடுக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!