சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம்: பொறுப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி கோரிக்கை
#SriLanka
#Sri Lanka President
#Ranil wickremesinghe
#IMF
Mayoorikka
2 years ago
சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தின் போது பொறுப்புடன் செயற்படுமாறு, அனைத்து அரசியல் தலைவர்களிடமும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
கண்டி மாநகர சபையின் 'கரலிய அரங்கம்' மற்றும் கலைக்கூடம் என்பவற்றை திறந்து வைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி நேற்று கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை நிராகரிக்கும் அனைவரும் நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்பதற்கான முன்மொழிவுகளை முன்வைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
எனவே, பொறுப்புக்களை ஏற்காமல் மக்களை மகிழ்விக்கும் வகையில் கருத்துக்களை வெளியிடும் அரசியலானது நாட்டை மீண்டும் பாதாளத்துக்கு இழுத்துச் செல்லும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.