திக்கம் வடிசாலையும் திக்கு திசை தெரியாத தமிழரும்!
யுத்தம் தொடங்கிய காலத்தில் இருந்து யுத்தம்முடிந்து இன்று 14 ஆண்டுகளாக போகின்ற நிலையிலும், வடக்கு கிழக்கில் இயங்கி வந்த அரசு மற்றும் தனியார் தொழிற்சாலைகள் தொடர்ந்து இயங்காமல் அல்லது இயங்க விடாமல் முட்டுக்கட்டை போடப்பட்டு முடக்கப்பட்டு இருப்பது நமது தலைவர்களின் ஆளுமை இன்மை என்று மனவருத்தத்துடன் கூற வேண்டும்.
இன்று பலர் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்வது தமது சொந்த இடங்களில் வேலைவாய்ப்பு இன்மையும், பொருளாதார இழப்பும் ஒரு பெரும் காரணமாக உள்ளது.
திக்கம்படி சாலை என்பது தமிழர் பிரதேசத்தின் பெரும் சொத்தான பனை மரத்தில் இருந்து எடுக்கும் பனங்கள்ளில் இருந்து விற்பனையாகாமல் மிஞ்சுகின்ற பனங்கள்ளை சாராயமாக மாற்றுகின்ற தொழிற்சாலை. இதில் மிகவும் முக்கியமான செய்தி என்னவென்றால் இது நமது பொறியியலாளர்களாலே வடிவமைக்கப்பட்டது என்பது மேலும் சிறப்பு.
#இத்தொழிற்சாலையை விரிவுபடுத்துவதன் மூலம் தனியாக #பனங்கள்ளிலிருந்து மட்டும் சாராயம் தயாரிக்காமல் வேறு #பொருட்களிலும் இருந்து #சாராயத்தை உற்பத்தி செய்யலாம். இதை இந்த யுத்தத்தின் பின்னான காலத்தில் எந்த தலைவர்களும் முன்னெடுக்க விரும்பவும் இல்லை முன்னெடுக்கவும் இல்லை.
இன்று தென்பகுதியில் உள்ள ஒரு தனியார் #நிறுவனம் அதை பொறுப்பேற்கப் போவதாக செய்திகள் வருகின்றது.
இதை ஒரு போதைப் #பொருள் உற்பத்தி செய்கின்ற நிலையமாகப் பார்க்காமல் நமது மண்ணில் உள்ள நமக்கான ஓர் #தொழிற்சாலையாக பார்க்க வேண்டும். நாம் உற்பத்தி செய்தாலும் உற்பத்தி செய்யாவிட்டாலும் #மதுபான விற்பனை நமது இடத்தில் நடைபெறுவது உறுதி.
ஆகவே இதை நாம் உற்பத்தி செய்வதில் என்ன தவறு? அதற்கான லாபம், அதிலே வேலை செய்யக்கூடியவர்களின் வேலை வாய்ப்பு என்று எமது #பொருளாதாரத்தையும், நமது இருப்பையும் தக்க வைக்க கூடிய ஓர் பாரம்பரிய வடிசாலையை நாம் மற்றவர்களுக்கு விட்டுக்கொடுக்கவேண்டும்? விட்டுக் கொடுப்பது என்பது நமது உரிமைகளையும், வளங்களையும் நாம் மெல்ல மெல்ல இழக்கின்றோம் என்பதன் அர்த்தம்.
இன்று பலர் தமிழர்கள் என்றால் #கொடிபிடிப்பதும் #விளக்கேற்றுவது மட்டும் என்று நினைக்கின்றார்கள்.
இப்படியான நமது மூல வளங்களை இழப்பது நாம் #தற்கொலை செய்வதற்கு சமம் என்பதை எப்பொழுது மக்கள் புரிந்து கொள்ளப் போகிறார்கள்? மக்களே சிந்தியுங்கள்! தலைவர்களை செயல்பட வையுங்கள்.
நன்றியுடன்
சோதிடர்
சுதாகர்
பிற்குறிப்பு: இது தனியார்மயம் ஆக்கப்பட்டதன் பின்பாக பாராளுமன்றத்தில் இது தொடர்பாக சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசுவதை பார்க்கக் கூடியதாக இருக்கும்!