சர்வதேச மனித உரிமைகள் தினம் : யாழிலும் போராட்டம்!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று, யாழ் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் ஊடக சந்திப்பொன்றை ஏற்ப்பாடு செய்திருந்தனர்.
யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடக சந்திப்பில் யாழ் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத் தலைவி சிவபாதம் இளங்கோதை, நிர்மலநாதன் மேரி ரஞ்சினி ஆகியோர் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
சர்வதேச மனித உரிமைகள் தினம் எமக்கு மனித உரிமைகள் மீறல் தினம். இன்று வரை எமக்கு நீதியில்லை சர்வதேசத்திற்கு எமது நிலை விளங்குகிறது. அதனால்த் தான் இராணுவத்தினர் சிலருக்கு பயணத்தடையை விதித்துள்ளது.
ஐ.நா வில் அரசு செல்வது ஒன்று இங்கு செய்வது ஒன்று.
இன்று நாடு வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது, இதற்கு மாறி வரும் ஒவ்வொரு அரசும் காரணம். ஒட்டு மொத்த மக்களும் இன்று பட்டினியில் வாழ்கின்றனர் என இளங்கோதை தெரிவித்துள்ளார்.