யாழில் கரை ஒதுங்கிய படகு!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை வடக்கு பொற்பதி பகுதியில் படகு ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
குறித்த படகு கரை தட்டுவதை கண்ட பிரதேச மீனவர்கள், பருத்தித்துறை பொலிசார், மற்றும் பாதுகாப்பு தரப்புக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பான மேலதிகாரி விசாரணைகளை பருத்தித்துறை பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த படகு மாதிரி இலங்கையில் பயன்படுத்துவது இல்லை என்றும் இது இந்தியா படகாக இருக்கலாம் எனவும் பிரதேச மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.