வெளிநாட்டு தூதரகங்களில் இருந்து விண்ணப்பிக்கப்படும் பத்திரங்களை பெற காலதாமதமாகுவது ஏன்?
வெளி நாடுகளில் இருந்து இயங்கும் தூதரகங்களில் விண்ணப்பிக்கப்படும் கடவுச்சீட்டுக்கள் மற்றும் பிறப்பு அத்தாட்சி பத்திரங்கள், திருமணப் பதிவு போன்றவற்றை பெற பல மாதங்கள் எடுப்பதாக சுவிஸ் பிரஜை ஒருவர் ஆதங்கமாக கூறியிருக்கிறார்.
இந்த கால தாமதத்திற்கு அல்லது இழுத்தடிப்புக்கு காரணம் இலஞ்ச ஊழலா அல்லது இன வேறுபாடா என்பதை அறிந்து அதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென #lanka4 ஊடகம் வேண்டிக்கொள்கிறது.
இதை அறிந்த #lanka4 ஊடகம் சுவிஸில் பணிப்புரிந்த முன்னாள் தூதுவர்கள் இருவரை தொடர்புக்கொண்டு விசாரித்த பொழுது, அவர் கூறிய விடயங்களை இங்கே பதிவு செய்கிறோம். அதாவது, வெளிநாடுகளில் இருந்து தற்பொழுது அதிகமான விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கப்படுகிறது.
ஆனால் அலுவலக ஊழியர்கள் தொகையை அதிகரிக்கவில்லை. அதனால் வெளி நாடுகளில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு வெளிநாட்டு சம்பளம் இல்லை. ஆனால் வேலை நேரம் அதிகம். அவர்கள் காலை 09.00 மணிக்கு அலுவலகத்தில் இருந்து வேலை செய்தால் முடியாத மிகுதி வேலையை வீட்டில் இருந்து செய்யவேண்டி இருக்கிறது.
சில வேளைகளில் விடுமுறையிலும் வேலை செய்யவேண்டி உள்ளது. பெரிய அதிகாரிகள் வெளி நாடுகளில் இலங்கை நேரத்துக்கு வேலை ஆரம்பித்து சுவிஸ் நேரத்தை தாண்டியும் வேலை செய்யவேண்டும். இவர்களுக்கு மேலதிக ஊதியம் என ஒன்றும் கிடையாது.
இப்படி இருந்தும் இவர்கள் தூக்கம் இல்லாமல் தமது வேலையை முடித்து இலங்கைக்கு அனுப்புகிறார்கள். இலங்கையில் ஏன் தாமதம் என்பது எமக்கு தெரியாது. எமக்கும் இலங்கை அலுவலகத்துக்கும் மட்டுப்படுத்தப்பட்ட தொடர்பே உள்ளது. அவர்கள் எமக்கு அனுப்பிய கடவுச்சீட்டோ வேறு பத்திரங்களோ அவ்வாரமே விண்ணப்பதாரிகள் தரும் முத்திரை ஒட்டிய என்வெலொப்புக்குள் வைத்து அனுப்பப்பட்டுவிடும்.
இவ் விண்ணப்பம் தொடர்பாக எனது அனுபவத்தில் சுவிஸ் நாட்டில் மட்டுமல்ல வேறு நாடுகளிலும் இன, மத, மொழி வேறுபாடு காட்டுவதில்லை. வெளி நாட்டு அலுவலகங்களில் அனைத்து இன, மத, மொழியினரும் பணிபுரிகிறார்கள். இலங்கை அலுவலகங்களில் என்ன நடை முறை என்பது எமக்கு தெரியாது. ஆனால் நாம் இங்கு கொடுக்கும் பற்றுச் சீட்டை சிலர் அங்குள்ள அலுவலக ஊழியர்களின் ஊடாக விரைவாக பெறுவதாகவும் அறியப்படுகிறது. அதற்காக இலஞ்சம் கொடுப்பது பற்றி எமக்கு தெரியாது.
எமக்கு வந்தால் நாம் விண்ணப்பதாரிகளுக்கு அனுப்பி வைப்பது எமது வேலை. அதை நாம் எவ்வித கட்டணமும் அறவிடாமல் சரியாக செய்கின்றோம். சில விண்ணப்பங்கள் காலம் தாமதித்தால் விண்ணப அதாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க நாம் இலங்கைக்கு தகவல் அனுப்பி உதவுகின்றோம்.
இப்படியான நிலை வெறும் பாகுபாடாக இருக்க வாய்ப்பில்லை. என்பதை நாம் திட்டவட்டமாக கூறமுடியும் எனத் தெரிவித்துள்ளனர். இப்பதிவு #lanka4 ஊடகத்தில் பிரத்தியேக செய்தியாகும்.