மனித உரிமைகள் மீறல்கள்! போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த சிறிதரன் எம்.பி
#SriLanka
#Protest
#Human Rights
#Human activities
#sritharan
Mayoorikka
2 years ago
சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று இடம்பெறும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று அவர் ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
சர்வதேச மனித உரிமைகள் தினமான எதிர்வரும் 10ம் திகதி கிளிநொச்சியில் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளனர்.
கடந்த 15 வருடங்களாக தமக்கு இழைக்கப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக போராடிவரும் நிலையில், இதுவரையில் எந்த தீர்வும் எட்டப்படவில்லை என தெரிவித்து சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளனர்.
அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு இதன்போது தெரிவித்தார்.