இலங்கையில் திறக்கப்படவுள்ளது தெற்காசியாவின் மிக உயர்ந்த சுழலும் உணவகம்!

#SriLanka #Colombo #lotus tower
PriyaRam
2 years ago
இலங்கையில் திறக்கப்படவுள்ளது தெற்காசியாவின் மிக உயர்ந்த சுழலும் உணவகம்!

தெற்காசியாவின் மிகவும் உயரமான சுழலும் உணவகம் இன்று கொழும்பில் திறக்கப்பட உள்ளது. கடந்த புதன்கிழமை தாமரைக் கோபுரத்தில் சுழலும் உணவகத்தின் திறப்பு விழா தொடர்பிலான அறிவிப்பை தாமரைக் கோபுர நிர்வாகம் அறிவித்தது.

இன்று திறக்கப்பப்பட உள்ள இந்த உணவகத்தில் நாளைமுதல் பொது மக்கள் உலகளாவிய பாரம்பரிய உணவுகளை சுவைக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிட்ரஸ் ஹோட்டல் குழுமத்துடன் இணைந்து இந்த உணவகம் பொதுமக்களுக்கு திறக்கப்படவுள்ளது.

images/content-image/2023/12/1702110922.jpg

தாமரை கோபுரம் மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டு 15 மாதங்களுக்கு பின்னர் இந்த சுழலும் உணவகம் திறக்கப்படுவதுடன், ஆரம்ப நிகழ்வில் அரசாங்கத்தின் உயர்மட்ட உறுப்பினர்கள் மற்றும் பன்நாட்டு இராஜதந்திரிகளும் கலந்துகொள்ள உள்ளனர்.

195 மீற்றர் உயரத்தில் abseiling, bungee jumping, paragliding போன்ற விளையாட்டுகள் மூலம் பல புதிய அனுபவங்களை வழங்க சர்வதேச தரத்திலான மூன்று உள்ளூர் நிறுவனங்களும் தமது பணிகளை ஆரம்பித்துள்ளது.

கொழும்பு மாநகரின் அழகை ரசிக்கும் வகையில் 356மீற்றர் உயரத்தில் மலர்ந்தது தாமரை கோபுரம். தெற்காசியாவிலேயே மிக உயரமானதும் உலகின் 19ஆவது பெரிய கோபுரம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!