ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதியின் புதிய வியூகம்!

#SriLanka #Sri Lanka President #Election #Chandrika Kumaratunga #Ranil wickremesinghe
PriyaRam
2 years ago
ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதியின் புதிய வியூகம்!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அரசாங்கத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தெரிவு செய்யும் பொறுப்பு முன்னாள் அமைச்சர்களான பசில் ராஜபக்ச மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரசியல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் தற்போது பல்வேறு தரப்பினரை அழைத்து இது சம்பந்தமாக இரகசியமான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிரணிகள் சார்பில் கூட்டணி ஒன்றை களமிறக்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் இரகசியமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பேசப்படுகிறது.

images/content-image/2023/12/1702109827.jpg

எனினும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வேட்பாளராக போட்டியிட்டால், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தனது இந்த நடவடிக்கையை நிறுத்தி விட்டு,ரணிலுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

ரணில் விக்ரமசிங்கவுக்கு ராஜபக்ச அணியினர் அல்லது அதில் உள்ள எவரும் ஆதரவு வழங்கவில்லை என்றால் மாத்திரமே சந்திரிகாவின் ஆதரவு ரணிலுக்கு கிடைக்குமா கிடைக்காதா என்பது உறுதியாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!