இலங்கைக்கு வரும் சீன கப்பல்கள்: வெளிவிவகார அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
இலங்கைக்கு எதிர்காலத்தில் விஜயம் மேற்கொள்ளும் கப்பல்கள் குறித்து இலங்கை அரசாங்கம் மேலதிக தகவல்களை கோரும் என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் கப்பல்களிற்கு அனுமதி வழங்குவதற்கு முன்னர் மேலும் பல தகவல்களை கோருவது என தீர்மானித்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆராய்ச்சி கப்பல்கள் உட்பட அனைத்து கப்பல்களிற்கும் நாங்கள் நிலையான செயற்பாட்டு நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளோம் கடந்த பத்து வருடங்களில் இலங்கைக்கு கப்பல்களை அனுப்பிய நாடுகளிற்கு இவற்றை வழங்கியுள்ளோம் என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆகவே அனைத்தும் வெளிப்படைதன்மையுடன் இடம்பெறுகின்றன நிலையான செயற்பாட்டு நடைமுறையை நாங்கள் அடிப்படையா கருதுகின்றோம் என தெரிவித்துள்ள அலி சப்ரி மூன்றாவது கப்பலிற்கான அனுமதி உள்ளுர் சகா ஒருவர் இல்லாமல் விடுக்கப்பட்டுள்ளது ஆராய்ச்சி நடைபெறும் இடங்களை சீனாவே தீர்மானிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இதனால் நாங்கள் அனுமதி வழங்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.