யாழில் ஆரம்பமாகவுள்ளது பொலிஸாரின் தீவிர நடவடிக்கை!
#SriLanka
#Jaffna
#Police
#search
PriyaRam
2 years ago
யாழ்ப்பாணத்தில் வாள் மற்றும் கத்திகளை தயாரிக்கும் இடங்களை தேடும் விசேட சுற்றிவளைப்புகள் தீவிரமாக நடத்தப்படும் என யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலத்தில் இடம்பெற்றுவரும் வாள்வெட்டு சம்பவங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்தில் கூலிக்கு வன்முறையில் ஈடுபடும் கும்பல்களுக்கு இடமளிக்க முடியாது என யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.