யாழில் வீடு புகுந்து கொள்ளை - சந்தேக நபர்கள் தொடர்பில் வெளியான தகவல்!
கொடிகாமம் பகுதியில் உள்ள இளைஞனை தாக்கி அவரது வீடு புகுந்து சேதப்படுத்தி நகை பணங்களை கொள்ளையிட்டு சென்ற சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொடிகாமம் - தவசிகுளம் பகுதியைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் மூவரும் விசாரணைகளுக்கு பின்னர் இன்று சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் - கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெள்ளாம்போக்கட்டி பகுதியில் கடந்த புதன்கிழமை வீதியால் சென்ற இளைஞன் மீது வன்முறைக் குழுவொன்று தாக்குதல் நடத்தியதுடன், குறித்த இளைஞனின் வீட்டிற்குச் சென்று பெறுமதியான உடமைகளை அடித்து நொருக்கியதுடன் வீட்டில் இருந்த நகை, பணம் போன்ற பெறுமதியான பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றனர்.
காயப்பட்ட இளைஞன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.