இந்திய-இலங்கை தரைவழி இணைப்பு உடனடி சாத்தியமற்றது - இந்தியாவின் பிரதான ஊடகம் செய்தி!

#India #SriLanka #Media
PriyaRam
2 years ago
இந்திய-இலங்கை தரைவழி இணைப்பு உடனடி சாத்தியமற்றது - இந்தியாவின் பிரதான ஊடகம் செய்தி!

உள்கட்டமைப்பு மேம்பாடு, எரிசக்தி இணைப்புகள் மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை மேம்படுத்த வேண்டும் என்று இந்தியாவின் பிரதான ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அண்மையில், இந்தியாவுடன் தரைவழி இணைப்பை ஏற்படுத்துவதற்கான முன்மொழிவை மேற்கொண்டிருந்தார். எனினும் அது உடனடியாக நடைமுறைக்கு வரப்போவதில்லை என அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக இருபது ஆண்டுகளுக்கு முன்னரும், அப்போதைய பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க, இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள தலைமானாருடன் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரத்தை இணைக்கும் பாலம் கட்டும் யோசனையை முன்வைத்திருந்தார்.

images/content-image/2023/12/1702098050.jpg

இது பிராந்திய பொருளாதார ஒருங்கிணைப்பு பற்றிய அவரது பெரிய பார்வையின் ஒரு பகுதியாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது இலங்கையையும் இந்தியாவின் தென் மாநிலங்களையும் உள்ளடக்கியது மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது.

எனினும் சிங்கள-பௌத்தர்களின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறும் குழுக்களும், கட்சிகளும் இலங்கைக்கு எந்தப் பயனும் தராது என்ற அடிப்படையில் இந்தத் திட்டத்திற்குத் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது இந்த விரிவுபடுத்தப்பட்ட பௌதீகத் தொடர்பைப் பற்றிய பேச்சு அடியோடு நின்றுவிடுகிறது என்றும் இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

2015 டிசம்பரில் இந்தியாவின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி, 24,000 கோடி ரூபாய் மதிப்பிலான இலங்கை இந்திய பாலத் திட்டத்திற்கு நிதியளிக்க ஆசிய அபிவிருத்தி வங்கி தயாராக இருப்பதாக மக்களவையில் தெரிவித்தபோது, எதிர்ப்பாளர்களின் கடுமையான விமர்சனங்கள் காரணமாக இலங்கையின் பதில் முடக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!