மஹரகம வைத்தியசாலையில் நெருக்கடி நிலை!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
மேலதிக நேர கொடுப்பனவு வெட்டப்பட்டதால், மஹரகம வைத்தியசாலையின் கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் நோயாளர்களை பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கியுள்ளனர்.
சுகாதார செயலாளர் கலந்துரையாடல் வழங்கும் வரை மேலதிக சேவைகளில் இருந்து விலகுவதாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள கதிரியக்க நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, முந்தைய நாளில் இருந்து மாலை 4 மணிக்கு மேல் கதிர்வீச்சு சிகிச்சையை தவிர்க்கின்றனர். இதனால், நோயாளிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.
கதிர்வீச்சு சிகிச்சை பெறுவதற்கு தொலைதூரத்தில் இருந்து முன்பதிவு செய்யும் நோயாளிகளும் திரும்பிச் செல்ல வேண்டியுள்ளது.