சட்டக் கல்லூரி தொடர்பில் ஜனாதிபதி எடுக்கவுள்ள நடவடிக்கை!

#SriLanka #Ranil wickremesinghe #Law
PriyaRam
2 years ago
சட்டக் கல்லூரி தொடர்பில் ஜனாதிபதி எடுக்கவுள்ள நடவடிக்கை!

சட்டக் கல்லூரி மாணவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கு அரசாங்கத்துக்கு சொந்தமான இடமொன்றைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 நடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் நடைபெற்ற சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், சட்டக் கல்லூரியின் வசதிகளை மேம்படுத்துவதற்கு அவசியமான திட்டத்தை விரைவில் தயாரிக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

images/content-image/2023/12/1701923257.jpg

ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான காணி ஒன்றை சட்ட கல்லூரிக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உறுதியளித்தார்.

அதன் முதற் கட்டமாக 40 பேர்சஸ் காணியை ஒதுக்குமாறும், திட்டத்துக்கு அவசியமான மேலதிக இடப்பரப்பை நீதி அமைச்சுடன் கலந்தாலோசித்த பின்னர் பெற்றுக்கொடுக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

150 வருடங்கள் பூர்த்தியாகும் சட்டக்கல்லூரியின், மாணவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க ஒரு துண்டு காணி கூட கிடைக்கவில்லை என்பதால், ஜனாதிபதி இது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளமைக்காக சட்டக்கல்லூரி அதிபர் நன்றி தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!