மராபி எரிமலை வெடிப்பு : 11 பேரின் உடல்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்!
#SriLanka
#world_news
#Indonesia
#Lanka4
Dhushanthini K
1 year ago

மேற்கு சுமத்ராவில் உள்ள மராபி எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து மலையேற்றத்தில் ஈடுபட்ட 11 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 12 பேர் காணாமல்போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மலையேற்றத்தில் 75 பேர் ஈடுபட்டிருந்த நிலையில் அவர்களில் 11 பேரின் உடல்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாகவும், 12 பேர் மாயமாகியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
2,891 மீட்டர் (9,485 அடி) உயரமுள்ள எரிமலை நேற்று (03.12) வெடித்த நிலையில், 3 கிமீ உயரம் வரை சாம்பலை உமிழ்ந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



