பிரான்ஸில் ஒட்டப்பட்ட விளம்பர சுவரொட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

#France #advertisements #Lanka4 #France Tamil News #Tamil News #Fined
Mugunthan Mugunthan
7 months ago
பிரான்ஸில் ஒட்டப்பட்ட விளம்பர சுவரொட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

பரிசில் விரைவில் திறக்கப்பட உள்ள அமெரிக்க உணவகம் ஒன்று, பரிசின் வீதிகளில் சுவரொட்டிகளை ஒட்டி விளம்பரப்படுத்தியுள்ளது. இந்த சுவரொட்டிகள் ஒட்டியமைக்காக குற்றப்பணம் அறவிடப்பட உள்ளது.

 அமெரிக்காவின் donuts Krispy Kreme நிறுவனம் முதன்முதலாக பிரான்சில், குறிப்பாக பரிசில் தனது முதலாவது கிளையை வரும் டிசம்பர் 6 ஆம் திகதி திறக்க உள்ளது. அவர்களது வருகையை சுவரொட்டிகள் மூலம் விளம்பரப்படுத்தி வருகிறனர்.

 வீதி வீதியாக விளம்பரப்படுத்தி வருகின்றனர். (மகரூன் உணவுக்கு இனி வேலை இல்லை. சிறந்த குரோசண்ட் உணவு பரிசுக்கு வருகை தந்துள்ளது” என அர்த்தப்படும் விதமாக ("Macaron démission! - "le meilleur croissant de Paris", "Ça aurait été plus logique d'ouvrir à Trouville") பல வாசகங்களை தாங்கிக்கொண்டு இந்த சுவரொட்டிகள் பரிசின் பல வீதிகளில் காணக்கூடியதாக உள்ளது.

images/content-image/1701340539.jpg

 இந்த சுவரொட்டிகள் அனுமதிக்கு மீறிய விளம்பரமாக காட்சியளிப்பதால் பரிசின் துணை முதல்வர் Emmanuel Grégoire, குறித்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்தார்.

 சுவரொட்டிகளை அகற்றி சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளுவதற்காக பெரும் குற்றப்பணம் ஒன்று அறவிடப்பட உள்ளதாகவும், சுவரொட்டி ஒன்றுக்கு ₤1,500 யூரோக்கள் வீதம் குற்றப்பணம் அறவிடப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.