டெக்சாஸ் கனமழை மற்றும் வெள்ளம் - 109 பேர் உயிரிழப்பு
#Death
#America
#Flood
#HeavyRain
Prasu
2 months ago

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள மத்திய கெர் கவுண்டியில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் தென்-மத்திய டெக்சாசில் உள்ள குவாடலூப் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
சில மாதங்கள் பெய்ய வேண்டிய மழை சில மணிநேரங்களில் பெய்ததால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றில் இருந்து வெளியேறிய தண்ணீர் ஊருக்குள் புகுந்தது.
இந்த திடீர் வெள்ளத்தில் வீடுகள், வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. பல இடங்களில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் பலர் வீடுகளின் மேற்கூரையில் தஞ்சம் அடைந்தனர்.
இந்நிலையில் கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது. 160க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் காணாமல் போயுள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



