பிரான்ஸ் பல்பொருள் அங்காடியில் கத்திக்குத்திற்கு ஊழியர் ஒருவர் இலக்காகியுள்ளார்

#Police #France #Attack #Lanka4 #கத்தி #தாக்குதல் #பொலிஸ் #லங்கா4 #Knife #பிரான்ஸ் #France Tamil News #Tamil News
Mugunthan Mugunthan
7 months ago
பிரான்ஸ் பல்பொருள் அங்காடியில் கத்திக்குத்திற்கு ஊழியர் ஒருவர் இலக்காகியுள்ளார்

Sannois ( Val-d'Oise ) நகரில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றின் ஊழியர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

 சனிக்கிழமை இரவு 8 மணி அளவில், அங்குள்ள பல்பொருள் அங்காடி ஒன்றினை மூடிவிட்டு, வீடு திருபிக்கொண்டிருந்த ஊழியர் ஒருவரை பின்னால் வந்த இருவர் கத்தியால் தாக்கியுள்ளனர். முதுகு மற்றும் மார்பு பகுதியில் கத்தியால் குத்தப்பட்டதில் அவர் படுகாயமடைந்தார்.

images/content-image/1701255544.jpg

 பின்னர் பாதசாரிகள் சிலர் SAMU மருத்துவக்குழுவினரை அழைத்து காயமடைந்தவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். மேற்படி தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர், தாக்குதலாளிகள் இருவரையும் கைது செய்தனர். என்ன நோக்கத்துக்காக தாக்குதல் இடம்பெற்றது என்பது தெரியவரவில்லை.