தேசியத் தலைவரின் படம் மற்றும் சின்னம் பொறிக்கப்பட்ட ஆடை - யாழில் இளைஞன் கைது!

#SriLanka #Jaffna #Arrest #Police
PriyaRam
10 months ago
தேசியத் தலைவரின் படம் மற்றும் சின்னம் பொறிக்கப்பட்ட ஆடை - யாழில் இளைஞன் கைது!

விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் புகைப்படம் பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்த குற்றச் சாட்டில் இளைஞரொருவர் இன்றைய தினம் இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொடிகாமம் ஐயனார் கோவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

images/content-image/2023/11/1701165106.jpg

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த குறித்த இளைஞர் விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் புகைப் படம் பொறித்த ஆடை அணிந்திருந்தமை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து இராணுவ புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட இளைஞர் பின்னர் கொடிகாமம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!