தியாக தீபம் திலீபனுக்கு உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
தமிழீழ விடுதலைக்காக தனது இன்னுயிரை தியாகம் செய்த தியாக தீபம் திலீபனுக்கு இன்று (27.11) உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திலேயே ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் க.சதீஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.
இதன் போது மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தி தீபமேற்றி மலரஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.