பொலிஸ் காவலில் இருந்து உயிரிழந்தோரின் தொகையை வெளியிட்டுள்ள மனிதவுரிமை ஆணைக்குழு!
#SriLanka
#Death
#Police
#Murder
#Human Rights
#Human activities
Mayoorikka
2 years ago
பொலிஸ் காவலில் உள்ள சந்தேக நபர்களை கையாள்வதற்கான புதிய வழிகாட்டுதல்களை தாம் தயாரித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களின் மரணங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணையாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
இந்த ஆண்டில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் பொலிஸ் காவலில் இறந்துள்ளனர்.
மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 11ஆம் திகதி வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.