இலங்கையில் பாதாள உலக குழு அதிகரிப்பதற்கான காரணத்தை விளக்கிய அமைச்சர்!
அரகலய போராட்டம் காலிமுகத்திடல் போராட்டத்தின் மூலம் நாட்டில் பாதாள உலகக் குழுக்களே அதிகரித்துள்ளன.
அதேபோன்று போதைப்பொருள் பாவனையும் அதிகரித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்தார்.
வரவு - செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
“ஒரு வருட காலம் காலிமுகத்திடல் போராட்டம் மற்றும் அது தொடர்பான சம்பவங்கள் குறித்து பொலிஸாரால் முழுமையாக கவனம் செலுத்த வேண்டியிருந்தது.

தனால் ஏனைய நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டது. இக்காலத்தில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலக செயற்பாடுகள் நாட்டில் அதிகரித்திருந்தன.
பதாள உலகத்தையும் போதைப்பொருளையும் படிப்படியாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
பொலிஸ் திணைக்களத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் காணப்படுகிறது. பொருளாதார நெருக்கடி காரணமாக நிரப்பப்படாதிருந்த இந்த வெற்றிடங்களை படிப்படியாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு 2,000 பொலிஸாரை சேவைக்கு நியமித்துள்ளோம். அடுத்த ஆண்டு 5,000 பொலிஸாரை நியமிக்க திட்டமிட்டுள்ளோம்'' என்றும் அவர் கூறியுள்ளார்.