சட்டவிரோத “மாவீரர் தின நினைவேந்தல்கள்” உயர் நீதிமன்றில் வழங்கப்பட்ட உறுதி மொழி!

#SriLanka #Colombo
PriyaRam
2 years ago
சட்டவிரோத “மாவீரர் தின நினைவேந்தல்கள்” உயர் நீதிமன்றில் வழங்கப்பட்ட உறுதி மொழி!

வடக்கு கிழக்கில் எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ள சட்டவிரோத “மாவீரர் தின நினைவேந்தல்கள்” தொடர்பில் பொலிஸ்மா அதிபர் மற்றும் பயங்கரவாத விசாரணைப் பணியகத்தின் பணிப்பாளர் ஆகியோர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் உறுதிமொழி ஒன்றை வழங்கியுள்ளனர்.

அதற்கமைய, பொதுச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் தேவையான சட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

images/content-image/2023/11/1700812947.jpg

இம்மாதம் 27ஆம் திகதி வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் நடைபெறவுள்ள சட்டவிரோத மாவீரர் தின நினைவேந்தல்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரி இராணுவத்தின் ஓய்வுபெற்ற புலனாய்வு அதிகாரியினால் சமர்ப்பிக்கப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, ​​பொலிஸ்மா அதிபர் மற்றும் பயங்கரவாதத் தடுப்புப் பணியகத்தின் பணிப்பாளர் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட அரசாங்க சட்டத்தரணி ஷமிந்த விக்ரம இந்த உறுதிமொழியை வழங்கினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!