சித்தன்கேணி இளைஞனின் உயிரிழப்பு தொடர்பான விசாரணை - நீதிமன்றில் பொலிஸார் குவிப்பு!

#SriLanka #Jaffna #Police #Court
PriyaRam
2 years ago
சித்தன்கேணி இளைஞனின் உயிரிழப்பு தொடர்பான விசாரணை - நீதிமன்றில் பொலிஸார் குவிப்பு!

யாழ்ப்பாண நீதிமன்ற வளாகம் முன்பாக வழமைக்கு மாறாக அதிகளவு பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வட்டுக்கோட்டை பொலிஸாரின் விசாரணையின் போது உயிரிழந்ததாக கூறப்படும் இளைஞனின் நீதிமன்ற விசாரணைகள் இன்றைய தினம் இடம்பெறவுள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இளைஞன் உயிரிழந்தது, யாழ். நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்கு உட்பட்ட பகுதி என்பதனால், குறித்த வழக்கு விசாரணைகள் யாழ்ப்பாண நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்று வருகின்றன.

கடந்த திங்கட்கிழமை இளைஞனின் உடற்கூற்று பரிசோதனை யாழ்.போதனா வைத்திசாலையில் மேற்கொள்ளப்பட்ட போது, நீதவான் நேரில் சென்று சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிசோதனை தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

தொடர்ந்து யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு சென்று, சிறைச்சாலை அத்தியட்சகர் மற்றும் உத்தியோகத்தர்களிடமும் வாக்கு மூலங்களை பெற்றுக் கொண்டார்.

 இந்தநிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படடுள்ள நிலையில், சிறைச்சாலை அத்தியட்சகர், சட்ட வைத்திய அதிகாரி மற்றும் கொலையான இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞன் ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகி தமது சாட்சியங்களை பதிவு செய்யவுள்ளனர்.

அதேவேளை, சட்ட வைத்திய அதிகாரி, உடற்கூற்று பரிசோதனை அறிக்கையையும் நீதிமன்றில் சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. உயிரிழந்த இளைஞனுக்காக 35க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் முன்னிலையாக தீர்மானித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!