வட்டி வீதங்கள் தொடர்பில் மத்திய வங்கி எடுத்துள்ள தீர்மானம்!
#SriLanka
#Bank
#Central Bank
#money
Mayoorikka
2 years ago
2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ், நாணயச் சபை தமது இரண்டாவது நாணயக் கொள்கை மீளாய்வை நேற்றைய தினம் (23) நடத்தியது.
இதன்போது கொள்கை வட்டி வீதங்களை குறைப்பதற்கு நாணயச் சபையினால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) 10 இல் இருந்து 9 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நிலையான கடன் வசதி வீதம் (SLFR) 11 இல் இருந்து 10 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
உள்ளுர் மற்றும் உலகப் பொருளாதாரத்தில் தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படும் அபிவிருத்திகளை பகுப்பாய்வு செய்ததன் பின்னர் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.