இஸ்ரேல் காஸா போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டும் பிணைக் கைதிகள் விடுவிக்கப்படவில்லை!

இஸ்ரேல் அரசாங்கம் முதன்முறையாக காஸாவில் 4 நாட்களுக்கு போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது.
நான்கு நாள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னும் பிணைக் கைதிகளை இஸ்ரேல் உடனடியாக விடுவிக்கவில்லை என இஸ்ரேலின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஸாசி ஹானெக்பி தெரிவித்தார்.
இந்தக் காலக்கட்டத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 50 பிணைக் கைதிகளை ஹமாஸ் குழுவினர் விடுவிப்பார்கள் என்று இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் இது போர் நிறுத்தம் இல்லை என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று (23) பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் காஸாவில் ஹமாஸ் போராளிகளிடம் சிக்கியுள்ள பிணைக் கைதிகளை விடுவிக்க வாய்ப்பு இல்லை.
“பிணைக் கைதிகளை விடுவிப்பது குறித்த பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.
பிணைக் கைதிகளின் விடுவிப்பு இரு தரப்பிலும் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி ஆரம்பிக்கப்படும்” என இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸாசி ஹானெக்பி தெரிவித்துள்ளார்.



