கூச்சலிடும் சரத் வீரசேகரவின் மூளையை பரிசோதனை செய்ய வேண்டும்! அநுர குமார

#SriLanka #TNA #srilankan politics #AnuraKumaraDissanayake
Mayoorikka
2 years ago
கூச்சலிடும் சரத் வீரசேகரவின்  மூளையை பரிசோதனை செய்ய வேண்டும்!  அநுர குமார

வடக்கு தமிழ் அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று கூச்சலிடும் சரத் வீரசேகரவின் மூளையை பரிசோதனை செய்ய வேண்டும் என ஜே .வி.பி. தலைவரும் எம்.பி.யுமான அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

 பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற 2024 ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தின் குழு நிலை விவாதத்தின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 இலங்கையில் .தமிழ்,சிங்களம் மற்றும் முஸ்லிம் சமூகங்களை ஒன்றிணைத்து தேசிய நல்லிணக்கம் உறுதி செய்யப்பட்டால் தான் தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.இனவாத கருத்துக்களின் வெளிப்பாடுகளினால் தான் 30 வருட கால யுத்தம் நடந்தது. 

ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்கள் தமது இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கு கட்டவிழ்த்து விட்ட இனவாதங்களினால் தான் இந்த நாடு 30 வருட கால யுத்தத்தை எதிர்கொண்டது.

 யுத்தம் முடிவடைந்து 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும் இனங்களுக்குகிடையில் தேசிய நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்படவில்லை. வடக்கில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று கூச்சலிடும் அரச தரப்பு எம்.பி.யான சரத் வீரசேகரவின் மூளையை பரிசோதனை செய்ய வேண்டும்.

 இவர்கள் ஒருபோதும் தேசிய நல்லிணக்கத்தை எதிர்பார்க்கவில்லை. இனவாதம் தோற்றம் பெறும் வகையில் தான் கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். 

இனவாதத்தை பரப்பி அதன் ஊடாக தமது இருப்பை தக்கவைத்துக் கொள்ளவே தொடர்ந்து முயற்சிக்கிறார்கள்.வடக்கு மற்றும் தெற்கில் அரசியல் தீர்வுகளுக்கு முன்னர் தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம் என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!