தெற்கிலே முடியுமாக இருந்தால் ஏன் வடக்கு ,கிழக்கில் நினைவு கூர முடியாது?

#SriLanka #Batticaloa #Death #Tamil People
Mayoorikka
2 years ago
தெற்கிலே  முடியுமாக இருந்தால் ஏன் வடக்கு ,கிழக்கில்  நினைவு கூர  முடியாது?

தெற்கில் ஏற்பட்ட கிளர்ச்சியின் மூலம் இறந்தவர்களை, அந்த தலைவரை தெற்கிலே நினைவு கூர முடியுமாக இருந்தால் ஏன் வடக்கு ,கிழக்கில் நினைவு கூர முடியாது? என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாவட்ட எம்.பி. கோவிந்தன் கருணாகரம் கேள்வி எழுப்பினார்.

 இதேவேளை, தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் கட்டிடங்களை, பொலிஸார் உடைத்துள்ளமை காட்டுமிராண்டித்தனமானது என கடுமையாக சாடினார்.

 பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற 2024 ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தின் குழு நிலை விவாதத்தின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவீரர்களை நினைவு கூர எந்தத்தடையும் இல்லை .

ஆனால் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் கட்டிடங்களை பொலிஸார் தற்போது உடைப்பதாக அறிந்தேன் இந்த நடவடிக்கை பாதுகாப்பு படையினரின் காட்டு மிராண்டித்தனம் . இதனை ஏற்க முடியாது என்றார்.

 தன்னுடைய குழந்தையை ,சகோதரனை ,கணவனை இழந்தவர்கள் தங்களின் உறவுகளை நினைத்து அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி ஒரு வருடத்துக்கு ஒருமுறை பூஜை செய்யும் இடமாகவே அவர்கள் மாவீரர் துயிலும் இல்லங்களைப் பார்க்கின்றார்கள்.

 தெற்கில் ஏற்பட்ட கிளர்ச்சியின் மூலம் இறந்தவர்களை, அந்த தலைவரை தெற்கிலே நினைவு கூற முடியுமாக இருந்தால் ஏன், வடக்கு, கிழக்கில் நினைவு கூர முடியாது ? ஏந்த ஒரு நாட்டிலும் உள்நாட்டு யுத்தமொன்றில் இறந்த ஒரு பொது மகனை நினைவு கூருவதற்கு எந்த ஒரு தடையுமில்லை. 

உள்நாட்டுச் சட்டங்கள் மாத்திரமல்ல சர்வதேச சட்டங்களும் இதற்குச்சாதகமாகவே உள்ளன என்றார்.

 யுத்தத்தில் இறந்த பொது மகன் மாத்திரமல்ல யுதத்தத்தில் ஒரு தரப்பாக இருந்துயுத்தம் புரிந்த ஒரு மகனைக்கூட நினைவு கூருவதற்கு அவனது உறவுகளுக்கு,அவனது நட்புகளுக்கு,அவனது இனத்துக்கு உரிமையுள்ளது. இதனைத் தடைசெய்ய எந்த ஒரு சட்டமும் இல்லை என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!