மன்னாரில் மாவீரர்களின் பெற்றோரை மதிப்பளிக்கும் நிகழ்வு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
மன்னாரில் மாவீரர்களின் பெற்றோரை மதிப்பளிக்கும் நிகழ்வு!

மாவீரர் வாரத்தை முன்னிட்டு ஈழபோராட்டத்தில் இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூறும் வகையில் மாவீரர்களின் பெற்றோர்களை மதிப்பளித்து கௌரவப் படுத்தும் நிகழ்வு இன்றைய தினம் (23.11) காலை 10.30 மணியளவில் மன்னார் நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.  

images/content-image/1700747727.jpg

புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டத்தில் உள்ள மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டு மதிப்பளிக்கும் விதமாக குறித்த நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டு இடம் பெற்றது.  

images/content-image/1700747751.jpg

குறித்த நிகழ்வில் மாவீரரின் பெற்றோரினால் பொது சுடர் ஏற்றப்பட்டு மாவீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் மரணித்த மாவீரர்களின் நினைவாக ஒவ்வொரு பெற்றோருக்கும் தென்னங் கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.  

images/content-image/1700747774.jpg

அதேநேரம் குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட மாவீரர் பெற்றோர்களுக்கு உலர் உணவு பொதிகளும் ஏற்பாட்டு குழுவினரால் வழங்கி வைக்கப்பட்டது. இவ் நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட மாவீரர் பெற்றோர்கள்இமுன்னால் போராளிகள்இஅருட்தந்தையர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!