தமிழர் தாயகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பதாதைகள்!
#SriLanka
#Kilinochchi
PriyaRam
2 years ago
கிளிநொச்சி பேருந்து நிலையம் முன்பாக விடுதலைப்புலிகளால் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தலைவர்களின் புகைப்படங்கள் அடங்கிய பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
“தமிழ் மண்ணின் மெய்யான தலைவர்கள்” என தலைப்பிட்டு, குறித்த பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி, உயிரிழந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான அமிர்தலிங்கம், மகேஸ்வரன் மற்றும் எழுத்தாளர்கள் எனப் பலரது புகைப்படங்கள் குறித்த பதாகைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

