தொடருந்து மோதி பிரான்ஸில் நபரொருவர் பலி!

#France #Accident #Lanka4 #விபத்து #லங்கா4 #MetroTrain #பிரான்ஸ் #France Tamil News #Tamil News
Mugunthan Mugunthan
3 months ago
தொடருந்து மோதி பிரான்ஸில் நபரொருவர் பலி!

RER E தொடருந்துடன் மோதுண்ட ஒருவர் உடல் நசுங்கி கொல்லப்பட்டுள்ளார். பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.25 மணி அளவில் gare Rosa-Parks நிலையத்தில் பயணி ஒருவர் தொடருந்து தண்டவாளத்தை கடக்க முற்பட்ட வேளையில், தொடருந்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானார்.

 குறித்த தொடருந்து நிலையத்துக்கு இறுதி நிமிடத்தில் வந்தடைந்த குறித்த பயணி, தொடருந்தை கைப்பற்றிவிட நினைத்து உயிரை மாய்த்துக்கொண்டதாக தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.

images/content-image/1700726350.jpg

 RER E தொடருந்து சாரதி மதுபாவனை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். ஆனால் அவர் மது அருந்தியிருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை அடுத்து மாலை முழுவதும் அங்கு போக்குவரத்து தடைப்பட்டது.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு