கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய கருத்து - மன்னிப்புக் கோரிய ரணில்!
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் செயலாளர் ஜெய்ஷா குறித்து இலங்கையில் வெளியான கருத்துக்களிற்காக அவரிடம் மன்னிப்பு கோரியதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகத்திற்கான நேர்காணலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் செயலாளர் இலங்கை கிரிக்கெட்டை நிர்வாகம் செய்கின்றார் என தெரிவித்துள்ள கருத்துக்கள் கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

இலங்கை ஜனாதிபதியே இந்த கருத்துக்களிற்காக மன்னிப்பு கோருமளவிற்கு இந்த விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் ரணில் விக்ரமசிங்க கருத்துத் தெரிவிக்கையில்,
“ஜெய்ஷா இலங்கை கிரிக்கெட்டை நிர்வகிக்கவில்லை, இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைக்கு ஜெய்ஷா ஆதரவளிக்கின்றார் என அவர்கள் கருதுகின்றனர்.
நான் ஜெய்ஷாவுடன் பேசினேன் வேதனையை வெளியிட்டேன் அவருடைய பெயர் தேவையில்லாமல் இழுக்கப்பட்டமைக்காக மன்னிப்பு கோரினேன்” என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.