சீரற்ற காலநிலையால் சிறுவர்களிடையே பல நோய்கள் பரவி வருகிறது : வைத்தியர் தீபால் பெரேரா!
தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் சிறுவர்கள் மத்தியில் பல நோய்கள் பரவி வருவதாக ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இதன்படி கை-கால் வாய் நோய், டெங்கு காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்ற பல நோய்கள் இன்றைய காலத்தில் சிறுவர்களிடையே காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்திய அவர், நோய் அறிகுறிகள் காணப்படும் பட்சத்தில், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக வாயைச் சுற்றி சிவப்பு புள்ளிகள் மற்றும் கைகளில் சிவப்பு புள்ளிகள் இருந்தால், அந்த குழந்தைகளுக்கு கால் மற்றும் வாய் நோய் வரலாம். அந்த குழந்தைகளை வீட்டிலேயே வைத்திருங்கள்.சில நாட்களில் குணமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் குழந்தைகளுக்கு சுத்தமான தண்ணீர்,சுத்தமான உணவு வழங்க வேண்டும் கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவுங்கள் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.