இராணுவத் தளபதி பதவி வெற்றிடமாக உள்ளதாக தகவல்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இராணுவத் தளபதி பதவி வெற்றிடமாக உள்ளதாக தகவல்!

இராணுவத் தளபதி பதவி இன்னும் வெற்றிடமாக இருப்பதாக இராணுவத் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

இராணுவத் தளபதியாக பதவி வகித்த மேஜர் ஜெனரல் சஞ்சய் வனசிங்க ஓய்வு பெற்று ஒன்றரை மாதங்களாக இந்தப் பதவி வெற்றிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இராணுவத்தின் நிர்வாகப் பணிகளில் மிக உயரிய பதவியான இராணுவத் தளபதி பதவிக்கு அதிகாரி ஒருவர் நியமிக்கப்படாததால், பல நிர்வாகச் சிக்கல்களும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

எனினும், ராணுவ தலைமை அதிகாரி பதவிக்கு அதிகாரி ஒருவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன்படி உரிய நியமனம் ஜனாதிபதியால் வழங்கப்பட வேண்டும் எனவும், இதுவரையில் நியமனம் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!