பதுளைக்கான புகையிரத சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
பதுளைக்கான புகையிரத சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது!

ஹாலி எல பகுதியில் புகையிரத பாதைக்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது. 

இதேவேளை, மலையக புகையிரத பாதையில் பதுளை வரை இயங்கும் புகையிரதங்கள் மறு அறிவித்தல் வரை நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.  

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பாறைகள் சரிந்து மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் புகையிரத சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதேவேளை, தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மண் மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக கொழும்பு - பதுளை பிரதான வீதி பலாங்கொட சமனலேவாவ ஹல்பே பிரதேசத்தில் இருந்து தடைப்பட்டுள்ளது.  

இதன் காரணமாக குறித்த வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!