இஸ்ரேலின் நான்கு நாள் போர் நிறுத்தம் இன்று முதல் ஆரம்பம்!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்ட 4 நாள் போர் நிறுத்தம் இன்று (23.11) காலை 10 மணி முதல் அமலுக்கு வரும் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.
ஆனால் இது தொடர்பாக இஸ்ரேல் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்று பிபிசி தெரிவித்துள்ளது.
இதேவேளை, பிணைக் கைதிகளின் முதலாவது குழுவை ஹமாஸ் அமைப்பு நாளை விடுவிக்கும் என நம்புவதாக இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சர் எலி கோஹன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே இன்று அறிவிக்கப்பட்டுள்ள உடன்படிக்கையின்படி, ஹமாஸ் பிடியில் உள்ள 50 இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள், அதற்கு ஈடாக, இஸ்ரேல் சிறை முகாம்களில் உள்ள சுமார் 150 பாலஸ்தீனிய பெண்கள் மற்றும் குழந்தைகளை இஸ்ரேல் விடுவிக்கும்.