அமெரிக்க தூதுவருக்கு அச்சுறுத்தல் விடுத்த சரத் வீரசேகர எம்.பி!

#SriLanka #Parliament #America #United States Ambassador to Sri Lanka
Mayoorikka
2 years ago
அமெரிக்க தூதுவருக்கு அச்சுறுத்தல் விடுத்த சரத் வீரசேகர எம்.பி!

தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவரான சரத் வீரசேகர எம்.பி.' இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார். 

 வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழு ஊடாக எச்சரிக்கை விடுக்க முடியுமா? அப்படியானால் இது அமெரிக்கா தூதுவருக்கு பாராளுமன்றம் விடுக்கும் எச்சரிக்கையா என சுயாதீன எதிரணி எம்.பி. யான சந்திம வீரக்கொடி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கேள்வி எழுப்பினார்.

images/content-image/2023/11/1700696660.jpg

 பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) சிறப்புரிமை பிரச்சினையை முன்வைத்தே இவ்வாறு கேள்வி எழுப்பினார். தற்போது பாராளுமன்றம் எவ்வித கட்டுப்பாடுகளுமில்லாமல் செயற்படுகிறது.பாராளுமன்றத்தில் இடம்பெறும் செயற்பாடுகளால் ஒட்டுமொத்த மக்களும் பாராளுமன்ற கட்டமைப்பை வெறுக்கிறார்கள்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவரான சரத் வீரசேகர எம்.பி.யின் செயற்பாடுகளினால் பாராளுமன்றத்தின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவரான சரத் வீரசேகர எம்.பி இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

இது முற்றிலும் தவறானதொரு செயற்பாடு .வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழு ஊடாக எச்சரிக்கை விடுக்க முடியுமா ?அப்படியானால் இது அமெரிக்கா தூதுவருக்கு பாராளுமன்றம் விடுக்கும் எச்சரிக்கையா? . 

 தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர எம்.பி.யின் தன்னிச்சையான தீர்மானங்களினால் எமது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது. 

ஆகவே இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்ற சிறப்புரிமை மற்றும் ஒழுக்கவியல் குழு ஊடாக விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!