இளைஞனின் மரணம் இதயத்தை வருத்துகிறது : டக்ளஸ் தேவானந்தா !
யாழ் - சித்தங்கேணிஇளைஞனின் மரணம் இதயத்தை வருத்துகிறது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
சந்தேகத்தின் பேரில் கைதான சித்தங்கேணி இளைஞன் நாகராஜா அலெக்ஸின் மரணம் குறித்து கருத்து வெளியிட்ட அவர், அவருடைய மரணமான செய்தி எல்லோர் இதயங்களையும் வருத்துகின்றது என தெரிவித்துள்ளார்.
கடுமையான குற்றவாளிகள் கூட நீதித்தீர்ப்பின் பிரகாரம் சிறையிருந்து வருகிறார்கள். சந்தேகத்தின் பேரில் கைதான ஒருவர் முழுமையான நீதி விசாரணைக்கு முன்பாகவே மரணத்தை தழுவியுள்ளார். இது நடந்திருக்கவே கூடாத கொடிய துயர் நிகழ்வு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இது குறித்த விசாரணைகள் நடந்து வருகின்றன எனவும் உண்மைகள் கண்டறியப்பட்டு நியாயங்கள் உணர்த்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்திய அவர், மரணமடைந்த இளைஞனின் குடும்பத்தவர்கள் படும் இழப்பின் வலிகளில் பங்கெடுக்கின்றேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.